வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா..? வெளியானது பிக்பாஸ் புரோமோ..
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை துவங்க உள்ள நிலையில், புதிய புரோமோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்த நிலையில்... நாளை முதல் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல், உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை துவங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபடி, நடிகர் கமல்ஹாசன் பேசும் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. இந்த முறை மிகவும் வித்யாசமாக பிக்பாஸ் வீடு அமைந்துள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் கமல் பிக்பாஸ் வீட்டில் நின்றபடி, வீடு ரெடி... வீரர்களும் ரெடி... வேட்டைக்கு நீங்கள் ரெடியா என கேட்டுள்ளார். அந்த புரோமோ இதோ...