Asianet News TamilAsianet News Tamil

போட்டியாளர்களை வெளுத்து வாங்க தயாரான கமல்..! அட ப்ரோமோவிலேயே என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் முழுக்க போட்டியாளர்கள் செய்த தவறுகளை இன்று தட்டி கேட்க செம்ம ஸ்டைலிஷாக வந்துள்ள கமல்ஹாசனின் ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Oct 22, 2022, 1:50 PM IST | Last Updated Oct 22, 2022, 1:50 PM IST

முதல் வாரமே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் பற்றி எரிய துவங்கி விட்டாலும், இரண்டாவது வாரத்தில்.. செருப்பை கழட்டி அடிக்க பாயும் அளவிற்கு சென்று விட்டது. இது போன்ற பிரச்சனைகள் வெளியில் இருந்து பார்பவர்களையே முகம் சுழிக்க வைத்தது.

அதே போல் அசல் கோலார் பெண் போட்டியாளர்கள் மீது, அத்து மீறி கை வைப்பதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் பிடித்த போட்டியாளர் என்றால் அவர்கள் மீது அன்பை பொழிவது , பிடிக்காத போட்டியாளர் என்றால் அவர்கள் மீது வெறுப்பை கக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வரும் நிலையில், தவறு செய்வதை தட்டி கேட்பது தானே நம் வேலை என கமல்ஹாசன் கூறும் ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவில்... தப்பு செய்றவங்களுக்கு, தான் செய்வது தப்பு என தெரியாமலே போவது எப்போது தெரியுமா? நீ செய்றது தப்பு என சொல்வதற்கு ஆளே இல்லாமல் போகும் போது தான். தப்பை தட்டி கேட்பது தானே நம்ப வேலை, அதுக்கு தானே நாம இருக்கோம் கேட்டுடுவோமோ என கூறி... போட்டியாளர்களை வெளுத்து வாங்க தயாராகியுள்ளார்.

Video Top Stories