‘இந்தியன் 2’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கெத்தாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்ஹாசன் - மாஸ் வீடியோ இதோ

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

First Published Jan 31, 2023, 1:58 PM IST | Last Updated Feb 1, 2023, 9:50 AM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் கமல்ஹாசன் உடன் பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை திருப்பதியை ஒட்டிய வனப்பகுதியில் நடத்தி வருகிறது.

இதில் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரத்தின் இளம் வயது காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பதி வனப்பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories