Indian 2: இந்தியனுக்கு சாவே கிடையாது! சும்மா தீயாக வெளியான கமல்ஹாசனின் 'இந்தியன் 2' இன்ட்ரோ வீடியோ!

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
 

First Published Nov 3, 2023, 6:31 PM IST | Last Updated Nov 3, 2023, 6:31 PM IST

கமல்ஹாசன் நடிப்பில்  கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். மனிஷா கொய்ராலா ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்தில், கஸ்தூரி, சுகன்யா, செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

 இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்திலும் கமல்ஹாசன் தான் நயகனாக நடித்துள்ளார். இதில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்படுவதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இன்ட்ரோ வேலியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


 

Video Top Stories