ஒன் மேன் ஆர்மி... சக்திவேல் நாயகனாக மாறி சம்பவம் செய்யும் கமல்! 'தக்லைஃப்' டைட்டிலுடன் வெளியான வீடியோ!

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தக் லைஃப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்த அறிவிப்பு சற்று முன் வெளியானது.
 

Share this Video

36 வருடங்களுக்கு பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டனில் உருவாகும் படத்தின் தலைப்பு, கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன் வெளியானது. இது கமல் ஒரு கேங் ஸ்டாராக நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்து கிலிம்ஸி வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், பொறக்கும் போதே என் தலையில எழுதி வச்சிட்டாங்க, சக்திவேல் நாயக்கன் கிரிமினல்னு.. 'யாகூசானா' ஜப்பான் மொழியில கேங் ஸ்டார்னு சொன்னாங்க. பின்னர் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. காளை என்னை தேடி வந்தது இது முதல் முறை அல்ல, என தன்னை தாக்க வந்த எதிரியின் மூக்கை கிழிக்கிறார் கமல். பின்னர் கடைசி முறையும் அல்ல என கூறுகிறார்.

பின்னர் எதிரிகளை தும்சம் பண்ணும் கமல், என் பேரு ரங்கராயன் சக்திவேல் நாயகன் என கூறுகிறார். மேலும் thug life என யாரும் யூகிக்காத வித்தியாசமான டைட்டிலுடன், இப்படத்தின் டைட்டில் மற்றும் அனௌன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகியுள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இது நாயகன் படத்தின் இரண்டாம் பக்கமா என்கிற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video