
இந்தியன் 2, தக் லைஃப் என தடுமாறும் கமல்; 15 வருஷத்துல வெறும் 3 ஹிட் தான் கொடுத்துள்ளாரா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவருக்கு இந்த அளவுக்கு மார்க்கெட் எகிறியதற்கு காரணம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. உலகளவில் ரூ.450 கோடி வசூலித்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் அவர் கொடுத்த ஹிட் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.