Biggboss Promo: விசாரிப்பதற்கும் கேட்பதற்கும் நிறைய கேள்விகள் உள்ளது! முதல் வாரத்திலேயே அதிரடி காட்டும் கமல்!
நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகி, இன்றைய நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரண்டு வாரங்கள்... பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சமூகமாகவே செல்லும். ஆனால் இந்த முறை... முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் முட்டி மோதிக்கொள்வதை பார்க்க முடிகிறது.
இதையே தான் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கூறியுள்ளார் கமல், கடந்த 5 சீசன்களில் இல்லாத அளவில், 40 நாட்களில் நடைபெற கூடிய பிரச்சனைகள் இப்போதே துவங்கி விட்டது. எனவே விசாரிப்பதற்கு, கேட்பதற்கும் நிறைய கேள்விகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்த புரோமோவை வைத்து பார்க்கையில் முதல் நாளே, சில போட்டியாளர்களை நோக்கி அதிரடியான கேள்விகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.