
காதலிக்க நேரமில்லை படத்தின் வைரல் ஹிட் சாங்; என்னை இழுக்குதடி பாடல் வீடியோ இதோ
காதலிக்க நேரமில்லை படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த என்னை இழுக்குதடி பாடலின் வீடியோவை படக்குழு யூடியூப்பில் ரிலீஸ் செய்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ரவி மோகன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவரது இசையில், வைரல் ஹிட் அடித்த ‘என்னை இழுக்குதடி’ பாடலின் முழு வீடியோ சாங்கை படக்குழு யூடியூபில் ரிலீஸ் செய்துள்ளது.
படம் வெளிவரும் முன்னரே வைரல் ஹிட் அடித்த இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானும், சந்தோஷ் நாராயணின் மகள் தீ-யும் இணைந்து பாடி இருந்தனர். இப்பாடல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தில் ரவி மோகன் உடன் வினய், நடிகர் யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
காதலிக்க நேரமில்லை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 11 ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தியேட்டரை போல் ஓடிடியிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.