நேசிச்சவங்க கூட இல்லனா வெற்றி கூட தோல்வி தான் 'க.மு க.பி' திரைப்படத்தின் டிரைலர்!
கல்யாணத்துக்கு முன் மற்றும் கல்யாணத்துக்கு பின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'க.மு க.பி' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில், அவரே தன்னுடைய புஷ்பநாதன் அண்ட் வி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'க.மு க.பி'.
திருமணத்திற்கு முன்பு காதலிக்கும் ஜோடிகள், திருமணத்திற்கு பின் எப்படி மாறுகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எப்படி விவாகரத்து நுழைகிறது என ஒரு எதார்த்தமான கதையை ரசிக்கும் வகையில் இயக்கியுள்ளார் இயக்குனர். இதில் விக்னேஷ் ரவி, டி எஸ் கே, சரண்யா ரவிச்சந்திரன், பிரியதர்ஷினி, நிரஞ்சன், அபிராமி முருகேசன் ,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி எம் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, சிவராஜ் பரமேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.