ஜூனியர் NTRன் பிரம்மாண்ட கட்அவுட்.. தீ வைத்து எரிக்கப்பட்டதா? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

Junior NTR Devara : பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர்-ன் தேவரா திரைப்படம் இன்று உலக அளவில் வெளியானது.

Ansgar R  | Published: Sep 27, 2024, 11:02 PM IST

தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நடிகர் தான் ஜூனியர் என்.டி.ஆர். இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "அரவிந்த சமேத வீரராகவ" என்ற திரைப்படத்தில் தான் சோலோ ஹீரோவாக இவர் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான "ரத்தம் ரணம் ரௌத்திரம்" என்ற திரைப்படத்தில் பிரபல நடிகர் ராம் சரனோடு இணைந்து கலக்கி இருந்தார் ஜூனியர் என்டிஆர். 

இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து ஜூனியர் என்டிஆர் சோலோ ஹீரோவாக அசத்தி இருக்கும் தேவரா திரைப்படம் இன்று உலக அளவில் வெளியான நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்டிஆரின் மிகப்பெரிய கட்டவுட் தீப்பற்றி எரிந்த விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

அங்கு ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது, அதில் வெடித்த பட்டாசுகள் மூலம் அந்த கட்டவுட் பற்றி முழுமையாக எரிந்ததாக ஒரு தரப்பினர் கூறினாலும், படம் சரியாக இல்லாததால் ரசிகர்களே அந்த கட்டவுட்டை கொளுத்தியதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது. எது எப்படி இருந்தாலும், இந்த சம்பவத்தில் உடனடியாக தீயணைப்பு துறையினர் களமிறங்கி தீயை அணைத்த நிலையில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.

Read More...

Video Top Stories