Dam Doom Daiyya : ஜெய்கே மற்றும் குழுவின் பேங்கர் இசை வீடியோ உருவான விதம்!

ஜெய்கே, தாம் தூம் தையா... என்ற சிங்கிள் பாடலை இசையமைத்துள்ளார். இந்த பாடல் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்பாடல் உருவான விதம் குறித்து குழுவினர் ஏசியாநெட் உடனான பிரத்யேக நேர்காணலில் பகிர்ந்துகொண்டனர்.
 

Share this Video

‘தாம் தூம் தையா...’ பாடல் மூலம் இசை உலகில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் தொழில்நுட்ப புரட்சியில் புதுமை படைக்க ஜெய்கே வந்துள்ளார். பல்வேறு தொழில்நுட்பங்கள் முன்னேற்றங்களுக்கு உந்து சக்தியாக இருப்பதால், மனிதனிடம் இன்னும் ஏதோ இருக்கிறது என்பதை அவரது பாடல் நம்பவைக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து ‘தாம் தூம் தைய்யா...’ பாடல் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என பலமொழிகளில் மாறி மாறி இசைத்து முற்றிலும் புதியதொரு மொழி அமைப்பை கொண்டுள்ளது. இந்த மியூசிக் வீடியோவில், தந்தையாக நடிக்கும் ஜெய்கே, தனது குழந்தைகள் பெரியவர்களாக வளரும் விவரங்களைக் எடுத்துரைக்கிறார். ஏசியாநெட் நியூஸ் சமீபத்தில் இசைக குழுவுடன் ஒரு பிரத்யேக நேர்காணலை நடத்தியது.

View post on Instagram


ஒரு எளிமையான உரையாடல் மூலம், ஜெய்கே புதிய பாடலை எவ்வாறு உருவாக்கினார் என்பதைப் பற்றி பேசினோம். அதற்கு அவர், "நான் பிறந்ததில் இருந்தே இசையை விரும்புபவன். இசை என் வாழ்வின் ஒரு அங்கம் என்றார். நான் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவன். என் தந்தை விஞ்ஞானி ஆனால் அவர் பாடல் பாடுவதை விரும்பினார். எனக்கு உறவினர்களும் உள்ளனர். எம்.பி.ஏ., பட்டதாரிகள். அவர்களும் பாடல்களை பாடுவதல் திறமையானவர்கள். நான் எப்போதும் இசை மற்றும் இசைக்கலைஞர்கள் சூழ வாழ்ந்து வருகிறேன் என்றார். .

பாடல் உருவான விதம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், “கடந்த ஆண்டு, நாங்கள் ஒரு இசை வீடியோவை உருவாக்க முடிவு செய்தபோது, ​​நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தோம். நான் ஒரு மியூசிக் வீடியோ இயக்குனரைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவர் தான் ஜிமிங் (இயக்குனர்) இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதில், மிகவும் மகிழ்ந்ததாக தெரிவித்தார். அப்போது பேசிய ஜிமிங், 'ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, நாங்கள் எப்போதும் மக்களைப் பார்க்கிறோம். மேலும், ஜெய்கே ஒரு சிறந்த ஒத்துழைப்பாளராகவும், அவருடன் வேலை செய்ய வேடிக்கையான நபராகவும் தோன்றினார்' என்றார்.

View post on Instagram


இந்த மியூசிக் வீடியோவில் தனது மகளையும் சேர்த்துக்கொள்வது குறித்தும் பேசினார். 'அவளை இந்த மியூசிக் வீடியோ திட்டத்தில் சேர்க்க நிறைய முயற்சி எடுத்தேன். அவளும் அதை விரும்பியவுடன், தன்னை முற்றிலும் அதில் ஈடுபடுத்திக்கொண்டார். அவள் மிகவும் திறமையானவள். சில மணி நேரங்களிலேயே ஸ்டுடியோவுக்குச் சென்றவள், ஒரு மணி நேரத்திற்குள் தன் பாடலின் பகுதியை முடித்துவிட்டாள். வீடியோவிலும் அவளைப் பயன்படுத்த முடிவு செய்தோம். ஆனால், அவள் அதை நிராகரித்துவிட்டாள்' என்று ஜெய்கே சிரித்துக் கொண்டே கூறினார். அதனுடன், தொடர்ந்து மியூசிக் வீடியோ உருவான விதத்தையும் குழுவினர் கூறினர். இது அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்று ஜிமிங் கூறினார்.

தாம் தூம் தையா... பாடலின் வீடியோவுக்குப் பயன்படுத்தப்பட்ட இடம் பற்றியும் ஜிமிங் பேசினார். 'இது எங்கள் வேலையின் நடைமுறைப் பிரச்சினையாக இருந்தது. எங்களிடம் குறைந்த அளவே பட்ஜெட் இருந்தன. அதனால் பெரும்பாலான படப்பிடிப்புகள் ஜெய்கேயின் வீட்டை ஒட்டியே நடந்தது என்றார். இந்த பாடலில் ஒரு கிளப் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அங்கு வீடியோ பதிவு செய்யப்பட்ட பிறகு மற்றொரு கிளப்களும் எங்களை வரவேற்றது.

Related Video