Makkamishi : பக்காவா வைப் பண்ண ஒரு மாஸ் சாங்.. மிரட்டிவிட்ட ஹாரிஸ்.. JRன் "பிரதர்" - வீடியோ அப்டேட்!

Jayam Ravi Brother Movie : பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் திரைப்படத்தில் இருந்து Makkamishi என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

First Published Jul 20, 2024, 6:06 PM IST | Last Updated Jul 20, 2024, 6:06 PM IST

மிகப்பெரிய கலை குடும்பத்தில் பிறந்த ஜெயம் ரவி, குழந்தை நட்சத்திரமாக ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2003ம் ஆண்டு தனது அண்ணன், இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான "ஜெயம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. 

தொடர்ச்சியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான "எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி", "மழை", "தீபாவளி", "சந்தோஷ் சுப்பிரமணியம்" மற்றும் "பேராண்மை" போன்ற திரைப்படங்கள், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கிய ஜெயம் ரவி, பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். 

இறுதியாக இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான "சைரன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் "பிரதர்" திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திலிருந்து ஒரு சூப்பர் ஹிட் வீடியோ பாடல் இப்பொழுது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

Video Top Stories