பெற்ற தாயின் ஒரு மார்பை வெட்டி எடுத்துக்கொள் என்கிறீர்! பல கேள்விக்கு விடை சொல்ல வரும் 'பொன்னியின் செல்வன் 2'

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள, பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது.
 

First Published Mar 29, 2023, 10:17 PM IST | Last Updated Mar 29, 2023, 11:13 PM IST

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ள இந்த படத்தின், முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ளது.

இப்படத்தின் பிரமோஷன் பணிகளை, இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கினர் பட குழுவினர்,  அடுத்தடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இசையின் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக்கியுள்ள பாடல்களை வெளியிடுவது மட்டுமின்றி, படத்தின் டிரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் 2' படத்தையும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இதில் உலக நாயகன் கமலஹாசன், இயக்குனர் மணிரத்தினம், ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், விக்ரம், ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் பாகத்தில் மிகப்பெரிய ட்விஸ்டுடன் இப்படம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இதற்கான விடைகள் கிடைத்துவிடும் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது. 
 

Video Top Stories