ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்திலிருந்து லாவெண்டர் நிறமே லிரிக்கல் பாடல் வெளியானது!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்திலிருந்து லாவெண்டர் நிறமே என்கிற லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி ஹீரோவாகவும், நித்தியா மேனன் கதாநாயகியாகவும் நடித்து வரும் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'லாவெண்டர் நிறமே' லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.