யாருக்கு இவர் பிரதர்னு தெரியலயே? நட்சத்திர பட்டாளத்தோடு வரும் ஜெயம் ரவி - Brother பட டீசர் இதோ!

Brother Movie Teaser : இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் "Brother". இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடித்திருக்கிறார்.

First Published Sep 21, 2024, 11:55 PM IST | Last Updated Sep 21, 2024, 11:57 PM IST

இறுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான "சைரன்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெயம் ரவி, இப்போது தொடர்ச்சியாக தனது மூன்று திரைப்படங்களை வெளியிட தயாராக இருக்கிறார். அதில் "ஜீனி" மற்றும் "காதலிக்க நேரமில்லை" ஆகிய இரண்டு திரைப்படங்கள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகியுள்ள "பிரதர்" என்கின்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தற்பொழுது அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில், பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா மோகன், ஜெயம் ரவிக்கு நாயகியாக நடித்திருக்கிறார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளான பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா, வி.டிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நடராஜன், பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இப்பொது அந்த படத்தில் டீசர் வெளியாகி ஹிட்டாகி வருகின்றது.

Video Top Stories