ஜெயம் ரவியின் தந்தை மோகன்.. அவருக்கு 3 முறை நடந்த காதல் திருமணம் - சுவாரசிய தகவல் இதோ!

Jayam Ravi Father Love Marriage : பிரபல நடிகர் ஜெயம் ரவியின் அப்பா மோகன் திரையுலகில் எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Video

பிறப்பால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்த்த எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் மோகனின் இயற்பெயர் ஜின்னா. பிரபல நடிகர் தங்கவேலு தான் சிறு வயது முதலே இவரை வளர்த்து வந்திருக்கிறார். அவர் மூலம் சினிமாவில் படத்தொகுப்பினை கற்றுக்கொண்டு, அதன்பிறகு எடிட்டராகவும், சில காலம் கழித்து திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்தார் ஜின்னா. 

நடிகர் தங்கவேலு ஜின்னாவிற்கு சூட்டிய பெயர் தான் மோகன், இந்த சூழலில் தான் கடந்த 1972ம் ஆண்டு பிராமண வீட்டு பெண்ணான வரலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மோகன். அப்போதே மதம் விட்டு மதம் மாறி வரலட்சுமியை திருமணம் செய்து கொண்டு புரட்சி செய்தார்.

அது மட்டுமல்லாமல் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய முறைப்படி மூன்று முறை அவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Video