குடும்பங்கள் கொண்டாடப்போகும் வெற்றி; பல எமோஷன்ஸ் கலந்த ஜெயம் ரவியின் Brother - ட்ரைலர் இதோ!

Brother Trailer : வருகின்ற தீபாவளி திருநாளுக்கு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Share this Video

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகச் சிறந்த நடிகராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருபவர் தான் ஜெயம் ரவி. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்ய எப்போதுமே அவர் தயங்கியதில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு நேர்த்தியான தனது நடிப்பால் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பெற்று வருகிறார். 

இந்த சூழலில் தான் அவர் தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து முடிவு குறித்து வெளியிட்டார். அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், தன்னுடைய திரை வாழ்க்கையை மனதில் வைத்தே இந்த முடிவை தான் எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த சூழலில் ஏற்கனவே அவருடைய நடிப்பில் "சைரன்" என்கின்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில், தற்போது தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். 

அதில் இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், கலாநிதி மாறன் தயாரிப்பில் "பிரதர்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். வருகின்ற தீபாவளி திருநாளன்று அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், VTV கணேஷ், ராவு ரமேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video