திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்; பாப் - பார்ட்டி என புதிய வைப்பில் வெளியான 'காதலிக்க நேரமில்லை' ட்ரைலர்!
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள, 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி பொங்கல் ரேஸை விட்டு விலகியதும், இயக்குனர் கிருத்திகா உதயநிதி தான் இயக்கிய ''காதலிக்க நேரமில்லை" திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதை அறிவித்தார்.
ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்தை மாடர்ன் கலாச்சாரத்துக்கு ஏற்றாப்போல் கிருத்திகா இயக்கி உள்ளார். பிளே பாய் ரோலில் ஜெயம் ரவி நடிக்க, நித்தியா மேனன் திருமணத்திற்கு முன்னே கற்பமாகிறார். சுவாரஸ்யமான காதல் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.