'ஜெயிலர்' படத்தில் இருந்து... தமன்னாவின் ஐட்டம் பாடலான காவாலா வீடியோ சாங் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை, நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். படம் வெளியானதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து, மோகன் லால், ஜாக்கி ஷெரிப், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படம் இதுவரை சுமார் 600 கோடி வசூல் செய்துள்ள நிலையில், 'ஜெயிலர்' படத்தின் வரலாற்று வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது. 

மேலும் இன்று இரவு, 'ஜெயிலர்' திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சற்று முன்னர் ஜெயிலர் படத்தில் தமன்னா ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட காவாலா பாடல் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Related Video