Asianet News TamilAsianet News Tamil

Rathamaarey Song: தாத்தா - பேரன் பாச மழையில் நனைய வைக்கும் 'ஜெயிலர்' மூன்றாவது சிங்கிள் பாடலான ரத்தமாரே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜெயிலர்' படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் பாடலான ரத்தமாரே லிரிக்கல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10- ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 'ஜெயிலர்' படம் வெளியாக இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில்... படத்தின் புரோமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இருந்து தாத்தா - பேரன் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ரத்தமாரே லிரிக்கல்  வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே... வெளியான காவாலா, ஜுஜுபி பாடல்கள் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இந்த பாடல் மூலம் ரசிகர்களை மெலடி மழையில் நனைய வைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் . 


 

Video Top Stories