Watch : மின்சார ரெயிலில் அட்டி போட்டு ஆதிபுருஷ் பட பாடலை பாடிய இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள ஜெய் ஸ்ரீராம் பாடலை இளைஞர்கள் மின்சார ரெயிலில் பாடி செல்லும் வீடியோ வைரலாகிறது.

Share this Video

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் பிரபாஸ் இராமனாக நடிக்க, கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் இராவணனாகவும் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆதி புருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் என்கிற பாடல் வெளியிடப்பட்டது. அப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்பாடலை மும்பையில் உள்ள மின்சார ரெயில் பயணிக்கும்போது சிலர் கோரஸாக பாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Related Video