பழைய படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த ஜெய்; ட்ரோல் செய்யப்படும் பேபி & பேபி டிரைலர் இதோ

பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேபி & பேபி திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.

Share this Video

ஜெய் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பேபி & பேபி. இப்படத்தை பிரதாப் இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு, சத்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், ஜெய்யும் யோகிபாபுவும் தங்கள் குழந்தைகளை மாற்றிக்கொள்ளும் கதை என்பதால் இது ராம்கி நடித்த ‘எனக்கு ஒரு மகன் பிறப்பான்’ படத்தின் காப்பியா என கிண்டலடித்து வருகின்றனர்.

பேபி & பேபி திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக பிரக்யா நக்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை யுவராஜ் தயாரித்து உள்ளார். தங்கதுரை, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, விக்னேஷ் காந்த், ராமர் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

Related Video