சூர்யா படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தது போலவே ஒரு பீல்..? வெளியானது 'தீராக்காதல்' பட ட்ரைலர்!

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள தீரா காதல் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் சூர்யா - ஜோதிகா படத்தை நினைவு படுத்துவது போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

First Published May 10, 2023, 7:20 PM IST | Last Updated May 10, 2023, 7:20 PM IST

நீண்ட இடைவெளிக்கு பின்னர், நடிகர் ஜெய் சோலோ ஹீரோவாக நடித்த வரும் மே 26 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தீரா காதல். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஜெய்யின் மனைவியாக ஷிவதா நடித்துள்ளார். காதலியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். காதலியை பிரிந்து, திருமணம் செய்து கொள்ளும் ஜெய் மனைவியுடன் மனைவி குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் முன்னாள் காதலி ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்க நேர்கிறது. பின்னர் அவருடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பு  முனைகள் ஏற்படுகிறது என்பதை விளக்கும் விதமாகவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டீசரை பார்க்கையில், சில்லுனு ஒரு காதல் படம் தான் நினைவுக்கு  வருவதாகவே நெட்டிசன்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். உணர்வு பூர்வமான காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர், தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார். சிந்து குமார் என்பவர் இசையமைக்க,  ரவிவர்மன் நீலமோகன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories