கங்குவா படத்தில் தம்பி கார்த்தி இருக்காரா? கேள்விக்கு நச் பதில் கொடுத்த சூர்யா - வைரல் வீடியோ!

Kanguva Movie : கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ம் தேதி திரை அரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து பேசியுள்ளார் சூர்யா.

Share this Video

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் வெளியாகவுள்ளது "கங்குவா" திரைப்படம். இப்போது அந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் சூர்யா. டெல்லி, ஹைதராபாத் என்று பல மாநிலங்களில் நடக்கும் விழாக்களில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடி வருகின்றார் அவர். 

இந்நிலையில் இன்று நடந்த கங்குவா திரைப்பட பிரமோஷன் பணிகளில் மக்களுடன் அவர் உரையாடினார். அப்போது இப்படத்தில் உங்களுடைய தம்பி கார்த்திக் ஒரு கேமியோ கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறாரா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு முதலில் சிறுத்தை சிவாவை பார்த்த நடிகர் சூர்யா. "ஏன் சர்ப்ரைசான விஷயங்களை முன்கூட்டியே சொல்ல வேண்டும்?. ஒருவேளை இந்த திரைப்படத்தில் கார்த்தி நடிக்கலாம். அல்லது வேறு யாராவது ஒரு நடிகர் நடித்திருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்" பதில் அளித்துள்ளார். 

நடிகர் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே மெய்யழகன் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கங்குவா படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் நடித்துள்ளாரா இல்லையா என்பது நவம்பர் 14ம் தேதி தெரிந்துவிடும். 

Related Video