ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்படுகிறாரா அசீம்..? அதிர்ச்சி புரோமோ..!

பிக்பாஸ் வீட்டை விட்டு, ரெட் கார்டு கொடுத்து அசீம் வீட்டை விட்டு அனுப்பப்படுகிறாரா? என்கிற கேள்வியை எழ வைத்துள்ளது தற்போது வெளியாகியுள்ள புரோமோ.
 

First Published Oct 22, 2022, 5:04 PM IST | Last Updated Oct 22, 2022, 5:04 PM IST

போட்டியாளர்கள் முன் இன்று தோன்றும் கமல்ஹாசன்... முதல் புரோமோவிலேயே அவரைகளை வெளுத்து வாங்க உள்ளதை, தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் போட்டியாளர்கள் முன் சில ரெட் கார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 21 போட்டியாளர்களில் யாருக்கு இந்த ரெட் கார்டை கொடுக்க விரும்புகிறீர்கள் என கமல்ஹாசன் கேட்கிறார். முதலில் வரும் விக்ரமன்... உலகில் அனைவருக்குமே ஒரு கண்ணியம் இருக்கிறது. அந்த கண்ணியத்தை அவர் கொடுக்க வேண்டும் என கூறி ரெட் கார்டை அசீமுக்கு வழங்கினார். ரக்ஷிதா அசீம் அதிகமாக குரலை உயர்த்தியதாக ரெட் கார்டை கொடுத்தார். இவரது தொடர்ந்து மஹாலக்ஷ்மி வான்டடாக அசீம் இப்படி செய்ததாக கூட தனக்கு தோன்றியதாக ரெட் கார்டை வழங்கினார். இப்படி ஒவ்வொருவராக அசீம்... ஆயிஷாவுடன் போட்ட சண்டையை நினைவில் வைத்து அவருக்கு ரெட் கார்டு வழங்கினர்.

கமல் முன் குற்றவாளியாக நிற்கும் அசீம்... ரெட் கார்டு கொடுத்து, வெளியேற்றப்படுவாரா என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 

Video Top Stories