
அப்போ இளையராஜா..இப்போ வைரமுத்து..ஏன் இவ்ளோ கோபம்?
தமிழ் சினிமாவில் பல நல்ல பாடல்களை கொடுத்த கவிஞராக வைரமுத்து விளங்கி வருகிறார். பல தசாப்தங்களாக ரசிகர்களை தனது வரிகளால் கட்டிப்போட்டு வைத்துள்ள அவர், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஆவேசமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தன்னுடைய பல்லவிகள் பலவற்றை தமிழ் திரையுலகம் தலைப்புகளாக பயன்படுத்தி இருப்பதாகவும், அது குறித்து தன்னிடம் மரியாதைக்கு கூட அனுமதி கேட்டதில்லை என்றும், இதுதான் உங்கள் நாகரிகமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.