watch : விடுதலை படத்துக்காக இளையராஜா இசையமைத்த பக்திப் பாடல்... வெளியானது ‘அருட்பெருஞ்ஜோதி’ லிரிக்கல் வீடியோ

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்திற்காக இளையராஜா இசையமைத்த பக்திப் பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள திரைப்படம் விடுதலை. சூரியும், விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கவுதம் மேனன், சேத்தன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நிலையில், அப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஒவ்வொன்றாக தற்போது யூடியூப்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ என்கிற பக்திப் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளதோடு அப்பாடலையும் அவரே பாடி உள்ளார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

Viduthalai Part 1 - Arutperum Jothi Lyric | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

Related Video