
பாடல் உரிமை வழக்கு - இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்
தேவர்மகன், குணா உள்பட 109 படங்களின் பாடல் உரிமம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இசைஞானி இளையராஜா இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டாவது மாஸ்டர் நீதிமன்றத்தில் இசைஞானி இளையராஜா இன்று ஆஜர் ஆனார். இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை உரிமையை அவரின் நிறுவனம் பெற்றுள்ளதாம்.
ஆனால் தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்களை தற்போது யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இளையராஜா கேட்டுக் கொண்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக தான் இளையராஜா இன்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆனார்.