Asianet News TamilAsianet News Tamil

மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் - நடிகர் ரஜினிகாந்த்!

சிவராத்திரி அன்று மயில்சாமி மரணமடைந்து இருப்பது தற்செயலாக நடந்தது இல்லை, எல்லாம் ஆண்டவனுடைய கணக்கு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று காலமானார். சென்னையில் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விடிய விடிய வந்த அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து ரஜினி பேசியதாவது : “மயில்சாமி என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர், அதோடு தீவிர சிவபக்தர். வருடந்தோறும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்லும் போதெல்லாம் எனக்கு போன் போடுவார் மயில்சாமி. கடந்த ஆண்டும் எனக்கு போன் செய்துள்ளார். நான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை எனக்கு போன் செய்திருந்தார். திரும்ப அவரிடம் பேச முடியாமலேயே போய்விட்டது.

Video Top Stories