பிக்பாஸ் பிரபலத்தை தாறுமாறாக நடுரோட்டில் குமுறிய பொதுமக்கள்.. பரபரப்பு வீடியோ..!
கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட் குடகு பகுதியில் சாலையில் நின்றிருந்த கார் ஒன்றை அவர் திடீரென்று கதவை இழுத்தும் கல்லால் எறிந்தும் தாக்கினார்.
கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் இருக்கிறார் இவர் எப்போதும் எதாவது சர்ச்சைகளில் சிக்கி கொண்ட இருப்பார் இதற்க்கு முன்பு ஹூச்சா வெங்கட். நடிகை ஒருவர் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக தற்கொலைக்கு முயன்று கன்னட சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு என்ற இடத்திற்க்கு சென்ற இவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். குடகு பகுதியில் சாலையில் நின்றிருந்த கார் ஒன்றை அவர் திடீரென்று கதவை இழுத்தும் கல்லால் எறிந்தும் தாக்கினார்.இதனை கண்டா அப்பகுதியில் இருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திடீரென்று அவர் மீது சரமாரியாகத் தாக்க தொடங்கினார்கள்.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வெங்கட்டை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹூச்சா வெங்கட் தாக்கப்படும் வீடியோ சமூக வளைத்தளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஹூச்சா வெங்கட் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கன்னட பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.