குழந்தை பேசுற வார்த்தையா இது? வசனங்களை காதுகொடுத்து கேட்க முடியல.. இயக்குனரை வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்கள

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாட் ஸ்பாட்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படம் குறித்து தாறுமாறாக கேள்வி எழுப்பி... இயக்குனரை வெளுத்து வாங்கியுள்ளனர் பத்திரிகையாளர்கள்.
 

First Published Mar 23, 2024, 7:17 PM IST | Last Updated Mar 23, 2024, 7:17 PM IST

திரைப்படங்களில் கூட கண்ணியமான கருத்து பேசப்படும் போது... அப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக மக்களின் பாராட்டுகளை பெரும். ஆனால் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான 'ஹாட் ஸ்பாட்' படத்திற்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ஆரம்பத்திலேயே காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்திகளும், கலாச்சாரத்தையே மாற்றும் அளவிற்கு, பெண் ஆணுக்கு தாலி கட்டுவதும்.. குழந்தை பேச கூடாத சில வார்திகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரைலரை பார்த்ததுமே இயக்குனரை, பத்திரிகையாளர்கள் வெளுத்தி வாங்கியுள்ளனர்.
 

Video Top Stories