சென்னையில் வெடிக்கும் குண்டு.. சர்ச்சையை கிளப்பும் ஹிப்ஹாப் ஆதி - கடைசி உலகப்போர் ட்ரைலர் இதோ!

Kadaisi Ulaga Por Trailer : ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுத்து, இயக்கம், இசை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் கடைசி உலகப்போர்.

First Published Sep 11, 2024, 9:18 PM IST | Last Updated Sep 11, 2024, 9:18 PM IST

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக களம் இறங்கி இப்போது இயக்குனராகவும், ஆக்சன் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் தான் ஹிப்ஹாப் தமிழா ஆதி. முதல் முறையாக அவருடைய எழுத்து, இயக்கம், இசை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிய பட்ஜெட் திரைப்படம் தான் "கடைசி உலகப் போர்". 

அரசியல் விடுதலைப் போராட்டம் என்று பல விஷயங்களை இந்த திரைப்படத்தின் மூலம் கூற வருகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி என்று தான் கூற வேண்டும். காரணம் தற்போது வெளியாகி உள்ள அந்த திரைப்படத்தின் டிரைலரில் பல விஷயங்கள் அரசியல் குறித்தும், உலகப் போர் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் குழந்தைகள் காப்பகத்தில் வளரும் தமிழரசன் என்ற நபர் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் விஷயங்களின் கோர்வையாக இந்த "கடைசி உலகப் போர்" திரைப்படம் உருவாகியுள்ளது. 

பிரபல நடிகர்கள் நாசர், நட்டி உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபல நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர். HHT Entertainment நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே சிவகுமாரின் சபதம் என்ற படத்தை தயாரித்துள்ளார் ஆதி என்பது குறிப்பிடத்தக்கது. 

Video Top Stories