LGM படத்தில் இருந்து ஹரிஷ் கல்யாண் - இவானாவின் கியூட் காதலோடு வெளியான 'சலனா சலனா' முதல் சிங்கிள் பாடல்!

LGM திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் லிரிக்கல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video

இந்திய அணியின் கிரிக்கெட் விளையாட்டு வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனியின் மனைவி சாக்ஷி தோனி தயாரிப்பில், தோனி என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'LGM'. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், தரமான படங்களை தேர்வு செய்து... முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இணைய தயாராகி உள்ள ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நதியா நடித்துள்ளார். ஹை கிளாஸ் ஃபேமிலியில் இளைஞர் ஒருவர்... காதலியிடமும், அம்மாவிடமும் சிக்கி தவிக்கும், காதல் கதையை அம்மாவின் செண்டிமெண்ட்டோடு இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. மீடியம் பட்ஜெட் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் மிர்ச்சி விஜய், தீபா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாக்ஷி தோனி கூறிய ஒன் லைனை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், டீசர் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான... சலனா சலனா என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video