LGM Teaser: கண்டிப்பா உன் கதையை முடிச்சிடுவா! ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'LGM' பட டீசர் வெளியானது..!

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவனா இருவரும் சாக்ஷி தோனி தயாரிப்பில் நடித்துள்ள 'LGM' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனியின் மனைவி சாக்ஷி தோனி தயாரிப்பில், தோணி என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'LGM'. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், 'லவ் டுடே' பட நாயகி இவனா ஹீரோயினாக நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நதியா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மிர்ச்சி விஜய், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துளள்னர். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு இவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம், சாக்ஷி தோனி கூறிய ஒன் லைனை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video