Asianet News TamilAsianet News Tamil

சீனு ராமசாமி இயக்கத்தில்.. ஜிவி வேட்டையை மடித்து கட்டி குத்தாட்டம் போட வைக்கும் 'அடி தேனி சந்தையிலே' லிரிக்கல்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'இடிமுழக்கம்' படத்தில் இருந்து அடி தேனி சந்தையிலே என்று துவங்கும், லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா பாடியுள்ள இந்த பாடலுக்கு, என் ஆர் ரகுநாதன் என்பவர் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து டப்பாங்குத்து பாடல் போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது. மேலும் ஜிவி பிரகாஷ் இந்த பாடலுக்கு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஆட்டம் போடும் அளவிற்கு பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார் என்பது லிரிக்கல் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.

இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பின்னர், இதுபோன்ற ஒரு பாடலை கேட்பதாக தெரிவித்து வருகின்றனர். விரைவில் 'இடிமுழக்கம்' திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். மேலும் கஞ்சா கருப்பு. சரண்யா பொன்வண்ணன். எம்எஸ் பாஸ்கர். உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, சங்கத் தமிழன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories