இங்க பேயும் நிஜம் சாவும் நிஜம்; ரிலீஸ் தேதியுடன் வெளியானது ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'கிங்ஸ்டன்' டீசர்!

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்ஸ்டன்' படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.
 

Share this Video

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள, கடலில் நடக்கும் முதல் அட்வென்ச்சர் திரைப்படமான, 'கிங்ஸ்டன் ' திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.‌ 2025 மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் திவ்யா பாரதி ஹீரோயினாக நடித்துள்ளார்.

Related Video