விஜயகாந்த் பிரதமர்... பயில்வானுக்கு 2 ஆஸ்கர்! என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல.. 'அடியே' ட்ரைலர்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'அடியே' படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Aug 8, 2023, 7:07 PM IST | Last Updated Aug 8, 2023, 7:07 PM IST

இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'அடியே'. இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை கௌரி கிஷன் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை வெளியான ஜிவி பிரகாஷ் படங்களில் இருந்து, மிகவும் வித்தியாசமான கதைகளத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷுக்கு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படத்தின் கதை. இதில் அவர் கௌரி கிஷனை காதலிக்க அந்த காதல் கை கூடுகிறதா? இல்லையா? என்பதை இயக்குனர் விறுவிறுப்பாக  கூறியுள்ளார்.

காமெடி, காதல், ஆக்ஷன், என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி உள்ள அடியே படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வெங்கட் பிரபு, பயில்வான் ரங்கநாதன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த ட்ரைலரில் விஜய்யின் படத்திற்கு பாராட்டு விழாவில் பிரதமர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மீசை பயில்வான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது தான் செம்ம ஹை லைட் என கூறலாம்.

Video Top Stories