ஜிவி பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படத்தின் ராசா ராசா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ' கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார், கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா' எனும் முதல் சிங்கிள் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கடல் பின்னணியில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ஆகும்.