முடிவெடுக்கும் தருணத்தில் ஜி.பி.முத்து...! கண்ணீருடன் கமல்ஹாசன் முன் ஆஜரான தருணம்..! வீடியோ

ஜிபி முத்து கமல் முன் ஆஜராகியுள்ள நிலையில், வீட்டுக்கு செல்வது என முடிவெடுக்க போகிறாரா? அல்ல நிகழ்ச்சியை தொடர போகிறாரா? என்பது குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Oct 22, 2022, 8:01 PM IST | Last Updated Oct 22, 2022, 8:01 PM IST

டிக்டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள ஜிபி முத்து, மிகவும் எதார்த்தமாக விளையாடி வருகிறார். வெளியில் இருந்ததை விட, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் இவருக்கான வரவேற்பும், ஆதரவும் அதிகரித்துள்ளது. 

முதல் வாரம், மிகவும் எதார்த்தமாக விளையாடிய ஜிபி முத்து, இரண்டாவது வாரம் முழுவதும் தன்னுடைய குழந்தைகள் நினைவாக தான் வலம் வந்துகொண்டிருக்கிறார். எனவே எப்படியாவது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆசைப்படுவதாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். ஏற்கனவே பிக்பாஸ்ஸிடம் பேசிவிட்டு, இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறுவது போல் ஒரு வீடியோ வெளியான நிலையில், தற்போது கமல்ஹாசன் முன் ஆஜராகியுள்ளார் ஜிபி முத்து.

பிக்பாஸ் அறைக்கு வந்து, பேசும் ஜிபி முத்துவிடம் கமல்ஹாசன்... உங்கள் பிள்ளைகள் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன முடிவெடுக்க போகிறீர்கள் என கேட்கிறார். இதற்க்கு ஜிபி முத்து  என்ன பதில் சொல்ல போகிறார்? என்பதை பொறுத்தே அவர் வெளியேறுவதும்... உள்ளே இருப்பதும் தீர்மானிக்கப்படும்.

Video Top Stories