அடி தூள்... முதல் வாரத்திலேயே மொத்த போட்டியாளர்கள் மனதையும் கவர்ந்த ஜிபி முத்து..! வெளியான புரோமோ!
முதல் வாரத்திலே பெஸ்ட் பர்ஃபாம்மர் என்கிற பட்டத்தை கைப்பற்றியுள்ளார் ஜிபி முத்து. இதுகுறித்த லேட்டஸ்ட் புரோமோ இதோ...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஏதேனும் சர்ச்சையில் சிக்கிவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து முதல் வாரத்திலேயே ஒட்டு மொத்த போட்டியாளர்கள் மனதையும் கவர்ந்துள்ளார். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை தனித்தனி கிளப்பாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில், இரண்டு பெஸ்ட் பர்ஃபாம்மாரை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். இதை தொடர்ந்து, வந்து பேசும் போட்டியாளர்கள் பெரும்பாலும் சாந்தி மற்றும் ஜி.பி.முத்துவை தேர்வு செய்கிறார்கள். இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது. முதல் வாரத்திலேயே ஒட்டு போட்டியாளர்கள் மனதையும் வென்றுள்ள ஜிபி முத்துவுக்கு அவரது ஆர்மியை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.