புதுமாப்பிள்ளை யூடியூபர் இர்பானை முதல் ஆளாக அழைத்து விருந்து கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி - வைரலாகும் வீடியோ

அண்மையில் திருமணமான யூடியூபர் இர்பானை தனது இல்லத்திற்கு அழைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருந்து கொடுத்துள்ளார்.

Share this Video

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபராக திகழ்ந்து வருபவர் இர்பான். இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களுடன் கூடிய இந்த யூடியூப் சேனனில் புட் விலாக் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார் இர்பான்.

யூடியூபர் இர்பானுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அவர் திருமணத்துக்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்திருந்தார். ஆனால் பிசியாக இருந்ததன் காரணமாக ஆளுநரால் இர்பானின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது. ஆளுநர் ஆர்.என்.ரவியும் இர்பானின் ரசிகர் என்பதால் அவர் இர்பானை திருமணம் முடிந்த கையோடு தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று இர்பான் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிவிட்டு சென்றுள்ளனர். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ஆளுநரின் இந்த செயலால் தான் உற்சாகத்தில் திளைத்துப் போனதாக யூடியூபர் இர்பான் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை குடும்பத்துடன் சந்தித்த யூடியூபர் இர்ஃபான் ❘ Irfan's View ❘ Governor RN Ravi

Related Video