Asianet News TamilAsianet News Tamil

திருமணத்தை தடுக்க வரும் தந்தையை தாக்கிய கோபி..! பாக்கியா சொன்ன விஷயம்.. அடுத்த என்ன நடக்க போகிறது?

கோபி ஒரு வழியாக பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற்று திருமணத்திற்கு தயாராகியுள்ள நிலையில்... இந்த திருமணம் நடைபெறுமா? நிறுத்தப்படுமா? என பரபரப்பு காட்சிகளுடன் வெளியாகியுள்ளது இன்றைய புரோமோ.
 

First Published Sep 28, 2022, 8:41 PM IST | Last Updated Sep 28, 2022, 8:41 PM IST

பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்ட பாக்கிய லட்சுமியுடன் சேர்ந்து மூன்று குழந்தைகளுக்கு தாந்தையான பின்னரும், தன்னுடைய பழைய காதலியான ராதிகாவை காலேஜ் பாய் போல், சுற்றி சுற்றி காதலித்து, பல பொய்களை பேசி கரெக்ட் செய்த கோபி, பல பிரச்சனைகளுக்கு பின் தற்போது திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.

பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற்றதும், ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி முயற்சிப்பது அவரது தந்தைக்கு தெரியவர, திருமணத்தை நிறுத்த நேரடியாக திருமண மண்டபத்துக்கே செல்கிறார். கோபியை பார்த்து, காலம் போன காலத்தில் கல்யாணம் பண்ணிக்க போறியா என சட்டையை பிடித்து கேள்வி கேட்க, கோவத்தில் கோபி அவரை தள்ளிவிடுகிறார்.

கோபி - ராதிகா திருமண மண்டபத்திற்கு சமையல் வேலை செய்ய வந்திருக்கும் பாக்கியா, மாமனாரை அழைத்து சென்று, இந்த வேலை தனக்கு மிகவும் முக்கியம் என கூறுகிறார். எனினும் இந்த திருமணம் கோபியின் பிளான் படி நடக்குமா? நடக்காதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Video Top Stories