"சிவாவிடம் பொறுப்பை ஒப்படைத்த தளபதி" GOAT பட மாஸ் சீன் - BTS வீடியோ வெளியிட்டு அசத்திய AGS!

GOAT BTS Video : நடிகர் சிவகார்த்திகேயன், தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அந்த காட்சியின் BTS வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

Share this Video

விரைவில் முழு நேர அரசியல் தலைவராக பயணிக்க உள்ள தளபதி விஜய், தனது 68வது திரைப்படமாக வெளியிட்டது தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படம். இப்படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி திரைப்படமாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு என்றால் அது மிகையல்ல. தற்பொழுது அந்த திரைப்படம் தியேட்டரில் வெளியான அதே கால அளவோடு, OTT தளத்திலும் வெளியாகி உள்ளது. 

விரைவில் அப்படத்தில் இருந்து டெலிட் காட்சிகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் பலரும் எதிர்பார்த்த நடிகர் சிவகார்த்திகேயனின் அந்த கேமியோ காட்சியின் BTS (Behind The Scenes) காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. கோட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. நடிகர் விஜய், சிவகார்த்திகேயனுக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்ததும் இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

Related Video