watch : நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜெர்மன் தூதரக அதிகாரிகள் - வைரல் வீடியோ

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் ஜெர்மன் தூதரக அதிகாரிகள் குத்தட்டம் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

Share this Video

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடல், உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது வழங்கப்பட்டு இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற பின்னர் நாட்டு நாட்டு பாடல் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் தற்போது டெல்லியில் மிகவும் பரபரப்பான பகுதியாக விளங்கி வரும் சாந்தினி சவுக் என்கிற பகுதியில் ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளனர். அதுகுறித்து வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது. 

Related Video