'கருடன்' பட போஸ்டர் ஷூட்டுக்கே சூரியை பாடாய் படுத்திய படக்குழு! போஸ்டர் மேக்கிங் வீடியோ!

விடுதலை படத்தை தொடர்ந்து சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' படத்தின் போஸ்டர் ஷூட்டிங் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.
 

Share this Video

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் துரை செந்தில்குமார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, பட்டாஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் சுமார் 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் தான் கருடன்.

கருடன் திரைப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், பிரிகிடா, ரோஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கருடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஷூட் குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Video