திரைப்பட இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரஃப் ஹம்சா போதை பொருள் வழக்கில் கைது !

Share this Video

அனுரக கரிக்கின்வெல்லம்', 'உண்டா' மற்றும் 'தல்லுமாலா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். அவரது சமீபத்திய படமான 'ஆலப்புழா ஜிம்கானா' தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கலால் துறையினர் சோதனை நடத்தினர். அதில், ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு குடியிருப்பில், இயக்குநர் காலித் ரஹ்மான், 'தமாஷா', 'பீமண்டே வாழி' படங்களுக்கு பெயர் பெற்ற மற்றொரு திரைப்பட இயக்குனர் அஷ்ரஃப் ஹம்சா, இயக்குனர்களின் நண்பர் ஷாலிஃப் முஹம்மது ஆகியோர் கஞ்சாவை பயன்படுத்த தயாரான நிலையில் கைது செய்யப்பட்டனர்.

Related Video