போயஸ் கார்டனில் கூடிய ரசிகர்கள்.. Selfie எடுத்து மகிழ்ந்த தனுஷ் - வைரல் வீடியோ!
Dhanush : இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு, அவருடைய ரசிகர்கள் நேரில் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் இன்று டாப் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர்தான் தனுஷ். சில தினங்களுக்கு முன்பு அவருடைய 50வது திரைப்படமான "ராயன்" திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் அவர் நடிக்க உள்ள நிலையில் இன்று அவர் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
புதிதாக அவர் போயஸ் கார்டனில் வாங்கியுள்ள இல்லத்தில் அவரை சந்திக்க பல ரசிகர்கள் குழுமிய நிலையில், அவர்களோடு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார் நடிகர் தனுஷ். இப்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும், ஹிந்தியிலும் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.
பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் இயக்கத்தில் உருவாகி வரும் "குபேரா" என்கின்ற திரைப்படத்தில் அவர் இப்பொழுது நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகி வருகின்றது.