
Exclusive
நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'ரெட்ரோ' மே 01 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கிய ஒரு இந்திய தமிழ் மொழி காதல் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரெட்ரோ திரைப்படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனபடத்தின் வெளியீட்டை ரசிகர்கள் சென்னையில் கொண்டாடினர்.