கன்னிமா பாடலுக்கு டஃப் கொடுக்க புது பாடலை இறக்கிவிட்ட தனுஷ் - குபேரா பர்ஸ்ட் சிங்கிள் இதோ

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமான, குபேராவில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

Share this Video

Kubera First Single Released : தனுஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள படம் குபேரா. இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குனரான சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவான ‘போய்வா நண்பா’ என்கிற பாடலை பர்ஸ்ட் சிங்கிளாக தற்போது ரிலீஸ் செய்துள்ளனர்.

குபேரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை தனுஷ் தான் பாடி உள்ளார். இப்பாடல் வரிகளை விவேகா எழுதி இருக்கிறார். குபேரா படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மினேனி பணியாற்றி உள்ளார்.

Related Video