நவீன் சந்திரா அசத்தும் "லெவன்"; ஸ்ருதி குரலில் "ஆண்டவர்" வெளியிட்ட முதல் சிங்கிள் பாடல்!

The Devil is Waiting : உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டு, நவீன் சந்திரா மற்றும் ரேயா ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'லெவன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளார்.

Ansgar R  | Published: Oct 11, 2024, 7:23 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் தான் 'லெவன்'. இன்று அந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். டி. இமான் இசையமைத்த, ஆற்றல்மிக்க அந்த பாடலை பிரபல நடிகை மற்றும் பாடகியான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். Eleven படத்தின் இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸின், இந்த பாடல் வரிகளை முழுமையாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை முன்னணி இசை நிறுவனமான சரேகாமா வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர் சி-யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ஆக்ஷன்’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தான் லோகேஷ் அஜ்ல்ஸ். அவர் தான் இப்பொது இந்த ‘லெவன்’ படத்தை இயக்குகியுள்ளார். இந்த முதல் சிங்கிள் பாடலைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "தி டெவில் இஸ் வெயிட்டிங் ஆங்கிலத்தில் உயர்தரத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க பாடல். டி. இம்மானின் இசையும், ஸ்ருதி ஹாசனின் குரலும் இந்த பாடலுக்கு முக்கிய பலம் என்றார் அவர்.

ஏஆர் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி தயாரித்து, லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா நடிப்பில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகியுள்ள 'லெவன்' நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Read More...

Video Top Stories